பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ராஜித கோரிக்கை

0
8

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக தம்மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மோஷன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளரான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனு தொடர்பாக ஆஜராகும்போது இந்த கோரிக்கையை விடுக்குமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த மனுவில் கோரப்பட்ட விடயங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.