29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை மனதில் இருத்தி பொதுநலனுக்காக ஒன்றிணைந்து செயற்;பட்டு, இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்ள உறுதி எடுத்தல் வேண்டும் என்று பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தீபாவளி வாழ்த்து செய்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை சமூகத்தில் பரப்புவதை மையப் பொருளாகக்கொண்டு, உலகம் முழுவதும் வாழ் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, எங்கும் ஒளி பரப்பி, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பிரிவினைக்கு ஆயிரம் காரணங்களை உருவாக்கினாலும், கட்சி, நிற, மத, இன பேதங்களை ஒதுக்கி, பொது அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தை இன்று நாம் அடைந்துள்ளோம். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் இத்தருணத்தில், தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை மனதில் இருத்தி, பொதுநலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்ள உறுதி எடுத்தல் வேண்டும். ‘ஆன்மீக இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமையை அழித்து நன்மை, அறியாமையிலிருந்து அறிவொளி’ என்பனவற்றைக் குறிக்கும் தீபாவளிப் பண்டிகையை அர்த்தமுள்ளதாக்கி, தனிமனித வெற்றியைவிட பொதுவான ஆன்மீக முன்னேற்றத்தின் வெற்றியில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles