பிரதமர் மோடிக்காக மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா!

0
139

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் மேன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம்இ நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவற்றில் மூவர்ண ஒளி படரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிரச்செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.