கிளிநொச்சி தருமபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு சந்திபகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வாய்தக்கம் முற்றியதால் உணவகத்தில் இருந்த உடைமைகள் சொத்துக்கள் அனைத்தும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மற்றும் 16 வயதுடைய மகன் மற்றும் உணவகத்தின் காசாளர் என நான்குபேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். நேற்று இரவு 7.30 மணியலவில் ஏற்பட்ட மின்தடை வேளையே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த நான்குபேரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் போலீசார் மேற்கொண்டு வருகின்றார்.