இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.
ஹெரி ஜயவர்தன என பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் பணக்காரர்களில் ஒருவராக ஜெயவர்தனவை போர்ப்ஸ் பட்டியலிட்டிருந்தது.
அமெரிக்காவிற்கு வெளியே சிறப்பாக நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் போர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை நிறுவனங்களான டிஸ்ரிலேற்றற்ஸ் ஒவ் சிறிலங்கா மற்றும் ஐற்கன் ஸ்பென்ஸ் என்பவற்றின் தலைவராகவும் ஜயவர்தன பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.