28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரபல பொப் பாடகர்: அரிய வகை நரம்பியல் நோயால் பாதிப்பு!

உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.
அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தின் ஒரு பக்க செயல்பாடுகளை முடங்கியுள்ளதாக ஜஸ்டின் பீபர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில், ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காது உள்ளிட்ட முகத்தின் ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தான் எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் வலதுபக்க கண், காது உள்ளிட்ட உறுப்புகளை இயக்க முடியவில்லை என அந்த காணொளியில் ஜஸ்டின் பீபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனால், தான் ஏற்பாடு செய்த இசைக் கச்சேரிகளையும் ரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles