பிரான்ஸ் ஓபன் சம்பியன் பட்டம் வென்ற போலந்து வீராங்கனை

0
105

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது. 

இதில் இரண்டாவதாக இடம்பெறும் பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிச்சுற்று போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை முச்சோவா போராடி 7-5 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றிய இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.