பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன போர் விமானம் தயாரிக்கத் திட்டம்

0
138

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகியன இணைந்து புதிய போர் விமானத்தை தயாரிக்கவுள்ளதாக இந்நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.

மனித விமானிகளுக்கு உதவக்கூடிய செயற்கை மதிநுட்பம் மற்றும் நவீன சென்சர்களும் இவ்விமானத்தில் பயன்படுத்தப்படும் தேவையானபோது, விமானி இல்லாமலும் இவ்விமானம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் அச்சுறுத்தல்களும் ஆக்ரோஷங்களும் அதிகரித்துவரும் வரும் நிலையில், எமது முன்னேற்றகரமான இராணுவ ஆற்றல்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இம்முயற்சி வேகமடையச் செய்யும் என இம்மூன்று நாடுகளும் விடுத்த கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன. 

2035 ஆம் ஆண்டு இப்புதிய விமானம் தயாராகவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், ரோம், மற்றும் ஜப்பானின் பியூஜி மலை ஆகியவற்றின் மேல் இவ்விமானம் பறப்பதாக சித்தரிக்கும் ஓவியங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

இத்திட்டத்துக்கு அமெரிக்காவும் ஆதரவளிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சும் இணைந்து வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.