30 C
Colombo
Sunday, November 10, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரிட்டன் நாடாளுமன்றம் கலைப்பு!

பிரிட்டன் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தேர்தல் இவ்வாண்டின் பிற்பாதில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிட்டின் பிரதமர் ரிஷி சுனாக் ஜூலை 4ஆம் திகதி தேர்தல் என்று கடந்த வாரம் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரிட்டன் பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்படும் நிலையில், இன்று நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles