பிரெவிஸ், துபே அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது CSK!

0
7

IPL 2025  சீசனின் 57ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

நேற்று (07) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் குர்பாஸ் 11, சுனில் நரேன் 26 ஓட்டங்கள் எடுத்தனர். ரஹேனே 48 ஓட்டங்கள் விளாசினார். ரகுவன்ஷி 1, மணீஷ் பாண்டே 36, ஆண்ட்ரே ரஸ்ஸல் 38, ரிங்கு சிங் 9, ராமன்தீப் சிங் 4 என 20 ஓவர் முடிவில் 179 ஓட்டங்களை கொல்கத்தா அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக நூர் அஹமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் வெளியேறினர். 5 ஓவர்களில் விக்கெட்களை கொல்கத்தா பற்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். இதனையடுத்து பிரெவிஸ் 52, ஷிவம் துபே 45 எடுத்து அணியின் நம்பிக்கையை மீட்டனர். அணியின் கேப்டன் தோனி 17 ஓட்டங்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 2 பந்துகள் மீதியிருக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி CSK வெற்றி பெற்றது.

CSK ஏற்கெனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் நிகர ஓட்டம் விகிதம் ஆகியவற்றை பொறுத்தே தெரியவரும்.