பிலிப்பைன்ஸில் கடல் ஆமை இறைச்சியை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Maguindanao del Norte மாகாணத்தில் உள்ள ஒரு கடலோர நகரத்தில் கடந்த வாரம் இந்த உணவை சாப்பிட்ட பிறகு பல பழங்குடி டெடுரே மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.