
பிலிப்பைன்ஸில் கடந்த 45 வருடங்களில் ஏற்படாத வெள்ளத்தை ஹம்கோ புயல் ஏற்படுத்தியுள்ளது. மேலும் புயல் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், “பிலிப்பைன்ஸை தாக்கிய ஹம்கோ புயல் வடக்கு பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வெள்ள தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. லுசான் தீவு புயலை தொடர்ந்து ஏற்பட்ட மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. புயலுக்கு இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்லது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிக்கோ டியூடெர்ட் புயல் பாதித்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸில் கடந்த 4 வாரங்களில் ஆறு புயல்கள் தாக்கியுள்ளதாக அதில் பெரும் சேதத்தை ஹம்கோ ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.