பிலிப்பைன்ஸ் மண்சரிவில் 5 பேர் உயிரிழப்பு-31 பேர் காயம்

0
104

தெற்கு பிலிப்பைன்ஸின் மலைப் பகுதியில் மழை காரணமாக நேற்று(06) இரவு கடுமையான மண்சரிவு ஏற்பட்டது. மின்டானோ தீவில் உள்ள ஒரு சுரங்க கிராமத்தில் ஏற்பட்ட இம்மண்சரிவினால் சில வீடுகள் சேதமடைந்தன. மேலும் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச சென்ற இரண்டு பஸ்கள் மண்சரிவில் சிக்கியுள்ளன. 

இந்த மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பஸ்களில் சுமார் 20 பேர் சிக்கியிருப்பதாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.