பப்பராஜிகள் காரில் துரத்தியவேளை ஹரிமேகனின் வாகனத்தை ஓட்டிய சாரதி ஹரியும் மேகனும் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
சுமார் பத்து நிமிடத்திற்குமேல் பப்பராஜிகள் ஹரி மேகனின் வாகனத்தை துரத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சொனி என அழைக்கப்படும் சுக்சரன் சிங் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் பப்பராஜிகள் ஆபத்தான விதத்தில் துரத்தியமை குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
67வது ஒழுங்கையில் நான்நின்றிருந்தவேளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்னை வரவேற்றார்கள் அதன் பின்னர் இளவரசரும் மனைவியும் எனது வாகனத்தில் ஏறவுள்ளது எனக்கு தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
குப்பை வண்டியால் நாங்கள் தடுக்கப்பட்டோம் திடீர் என பாப்பராஜிகள் வந்தனர் படமெடுக்க ஆரம்பித்தனர் ஹரியும் மேகனும் பதற்றமாக காணப்பட்டனர் அவர்களை முழு நாளும் பப்பராஜிகள் துரத்தியிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது காரில் அவர்கள் இருந்தவேளை அவர்களிற்கு ஆபத்து காணப்பட்டது என தான் கருதவில்லை என சிங் தெரிவித்துள்ளார்.
இது மிகைப்படுத்தப்பட்ட தகவல் அது குறித்து நிறைய யோசிக்காதீர்கள் எனது வாகனத்தில் ஏறுவதற்கு முன்னர் அவ்வாறான நிலை காணப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கே மிகவும் பாதுகாப்பான நகரம் பொலிஸார் எங்கும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படப்பிடிப்பாளர்களால் (பப்பராஜிகளால் )துரத்தப்பட்ட இளவரசர் ஹரிதம்பதியினர் பாரிய விபத்தொன்றில் சிக்கும் ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
நியுயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஹரி மேகன் தம்பதியினர் விருதுவழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் அவர்களை புகைப்படப்பிடிப்பாளர்கள் பின்தொடர்ந்து துரத்தியுள்ளனர்.
தங்கள் வாகனம் இரண்டு மணிநேரம் துரத்தப்பட்டது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வீதியில் காணப்பட்ட வாகனங்கள் பாதசாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் தங்கள் வாகனம் மோதுப்படும் நிலை உருவானது என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
விருது வழங்கும் நிகழ்வில் ஹரிதம்பதியினருடன் மேகனின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.அவர்கள் அந்த நிகழ்விலிருந்து வெளியேறுவதை புகைப்படங்கள் காண்பித்துள்ளன.
இதன்பின்னர் ஆறிற்கும் மேற்பட்ட கார்கள் அவர்களின் வாகனத்தை துரத்தியுள்ளன கண்மூடித்தனமாக ஹரியின் வாகனத்தை அவர்கள் பின்தொடர்ந்துள்ளனர் – ஆங்கில படப்பாணியில் ஹரியின் வாகனம் துரத்தப்பட்டுள்ளது- பப்பராசிகள் வாகனத்தை துரத்தியவாறு ஹரிதம்பதியினரை படம்பிடித்துள்ளனர்.