புகையிரதத்துடன் மோதி வான் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

0
122

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில், புகையிரதத்துடன் மோதி வான் விபத்திற்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புகையிரதம் பயணித்த வேளை, இன்று மாலை 6.00 மணிக்கு, இணுவில் பாதுகாப்பற்ற கடவையில், விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில், ஆனந்தராஜா சயந்தன், சயந்தன் பிரியங்கா மற்றும் அவர்களது 4 மாத குழந்தை ஆகியோர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், குழந்தையும் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.

பெண், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.