புகையிரத தாமதங்கள், புகையிரத தடம்புரள்வுகள் இவ் ஆண்டில் அதிகரிப்பு

0
140

இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் அதிகூடிய புகையிரத தாமதங்கள் மற்றும் தடம் தடம்புரள்வுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக புகையிரத இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத தடங்கள், இயந்திரங்கள் மற்றும் பெட்டிகளை பராமரிக்கும் திணைக்களத்தின் செயலிழப்பே இந்த நிலைமைக்கு காரணம் என்று சங்கத்தின் தலைவர் கே.இ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.