புதிதாக 40 பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளன

0
191

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக நாளை முதல் புதிதாக 40 பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சேவையில் உள்ள ‘சிசு செரிய’ பேருந்துகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் சேர்க்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
புதிய சேவையின் கீழ், சாதாரண பேருந்து கட்டணத்திற்கு உட்பட்டு மாணவர்களை ஏற்றிச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.