புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பந்துல குணவர்தன கருத்து

0
77
புதிய கல்விக் கொள்கையில் பரீட்சையின் காலம் மற்றும் முடிவுகள் வெளியாகும் காலப்பகுதி உள்ளடக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தேவையான தீர்வுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த.சாதாரண, உயர்தரம் போன்ற மூன்று பிரதான பரீட்சைகளின் பெறுபேறுகள் நாடு வழமையான நிலையில் இருந்த காலத்திலேயே வெளியிடப்பட்டதாகவும், ஒட்டுமொத்த கல்வி முறைமை கொவிட் தொற்றுநோய் காரணமாக சீர்குலைந்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.பல்வேறு பிரசாரங்கள், போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால் நாட்டில் கல்வியும் சீர்குலைந்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கு தானும் பரீட்சைகள் திணைக்களமும் கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் எப்போதும் பாராளுமன்றத்தில் தெரிவித்து வருவதாகவும், ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.25 நிபுணர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு கல்விக்காக புதிய தேசிய கொள்கையொன்று அமுல்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.