இலங்கையில் முதல் தடவையாக, தேசிய ரின் மீன் உற்பத்தி நிறுவனம், தனது நவீன தயாரிப்பான, நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய, ஒரு கிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் பை ஒன்றை, சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு, இன்று, கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
தேசிய ரின் மீன் உற்பத்தி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் கபில பாலசூரியவினால், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், சம்பிரதாயபூர்வமாக, ரீன் மீன் பை கைளிக்கப்பட்டதுடன், வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு உகந்த வகையில், இது தயாரிக்கப்பட்டுள்ளதாக, பணிப்பாளர் கபில பாலசூரிய தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிசாந்த விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.