புதிய நெல் வகை அறிமுகம்!

0
118

அம்பலாந்தோட்டை அரசாங்க அரிசி ஆராய்ச்சி நிறுவனம் AT 378 சுடு கெகுலு (நாடு) என்ற புதிய நெல் வகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

13 வருடகால ஆராய்ச்சியின் பின்னர் இது அறிமுகம் செய்யப்பட்டதாக ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷனி சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய இந்த புதிய நெல் ரகத்தால் ஏக்கருக்கு 180 நெல் மூட்டை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.      ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம், மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் விவசாயிகளுக்கு இந்தப் புதிய நெல் வகை இப் பருவத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் எந்தப் பகுதியிலும் பயிரிட ஏற்றது எனவும் அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷனி சிறிவர்தன தெரிவித்தார்.