இலங்கையின் புதிய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.இதன்போது சட்டத்தின் ஆட்சி வெளிப்படைத்தன்மை இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் எக்ஸ் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் எதிர்காலத்தில் பெண் தலைவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்கத் தூதுவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.அத்துடன் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராகவும் இரண்டாவது பெண் பிரதம நீதியரசராகவும் பதவியேற்றுக் கொண்டமைக்காக பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவுக்கு அமெரிக்காவின் சார்பில் வாழ்த்தினையும் தெரிவித்ததாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.