அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைபுக்கு எதிராக, மன்னார் நகர பகுதியில், இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின், மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
குறித்த சுவரொட்டியில், மீன்பிடி தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும், புதிய மீன்பிடி சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.