புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நால்வர் கைது

0
106

பதுளை, ஊவாபரணகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டபத்தன பிரதேசத்தில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மதவாச்சி, கெட்டபத்தன ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த 41 மற்றும் 72 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.