புத்தளத்தில் பதுக்கி வைத்த டீசல் மற்றும் பெற்றோல் மீட்பு!

0
159

புத்தளம் பகுதியில் ஒயில் கடையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 165 லீட்டர் டீசல் மற்றும் 25 லீட்டர் பெற்றோலுடன் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தம்பபன்னி கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது புத்தளம் பொலிஸாருடன் இணைந்து ஒயில் கடையில் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.