வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட புத்தளம் – கொழும்பு ரயில் சேவை, இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு, கொழும்பில் இருந்து புத்தளம் வரை இயங்கும் 4 ரயில் சேவைகள் இடம்பெறும் நிலையில், அனைத்து சேவைகளும் இடம்பெறுவதாக, ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
