புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற விசேட பேருந்து சேவைகள் தொடர்பாக 187 முறைப்பாடுகள் பயணிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அவற்றில் 63 முறைப்பாடுகள், அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக பணம் அறவிட்டமை தொடர்பானவையாகும்.
அத்துடன் பயணச்சீட்டு விநியோகிக்காமை போன்ற குற்றச்சாட்டுகளும், பேருந்து சேவை தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 1955 என்ற அவசர இலக்கத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெறும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.