தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முதலாவதாக பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதி வழங்கப்படும்.அந்த வகையில் காலை 9.30 முதல் 10.45 வரை இரண்டாம் பகுதி பரீட்சை ஆரம்பமாகும். அதனை தொடர்ந்து 11.15 மணியளவில் பரீட்சை வினாத்தாளின் முதலாம் பாகுதி வழங்கப்படும்.
பேனாவினால் பரீட்சார்த்திகள் பதிலளிப்பார்களாயின் நீலம் மற்றும் கறுப்பு நிற பேனைகளை பயன்படுத்த முடியும். வேறு வர்ண பேனைகளை பயன்படுத்த முடியாது.அதேபோன்று பென்சிலை பயன்படுத்து பொருத்தமான விடயமாக அமையும். பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்குள் சிமார்ட் கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த முடியாது.
அதேபோன்று 15ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசின் பரீட்சை இடம்பெறவுள்ளதால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஒலிவாங்கிகளை பயன்படுத்தும் போது மாணவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுமாறு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். அதேபோன்று இவ்வருட கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.