புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடைநீக்கம்?

0
169

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக,
குறிப்பிட்ட சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் தடை நீக்கப்பட்ட சில அமைப்புக்கள் மீது – கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் மீளவும் தடைவிதித்தது.
குறித்த தடையே தற்போது நீக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் அமைப்புக்கள் பல குழுக்களாக இயங்கிய போதிலும் கூட, ஒரு
சில அமைப்புக்கள் மட்டுமே, குறித்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்க
ளோடும் ராஜதந்திரிகளோடும் தொடர்பிலிருக்கின்றன.
இதற்கப்பால், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தோடும் தொடர்பிலிருக்கின்றன.
இவ்வாறான அமைப்புக்கள் உட்பட இன்னும் பல அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதுமே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தடை விதித்திருந்தது.
குறித்த தடையையே, ரணில்-மைத்திரி அரசாங்கம் நீக்கியிருந்தது.
குறிப்பாக உலகத் தமிழர் பேரவை, தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனோடு நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற, ராஜாங்கத் திணைக்கள சந்திப்பின் போதும், கூட்டமைப்பின் பிரதிநிதிகளோடு, உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.
குறித்த சந்திப்பு, அமெரிக்க அழைப்பின் கீழ் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவை பெறும் நோக்கில், மங்கள சமரவீர
தலைமையிலான குழுவினர், சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின்
சார்பிலான புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகளை 2013இல், சிங்கப்பூரில் சந்தித்திருந்தனர்.
இந்த சந்திப்பிலிருந்து, உலகத் தமிழர் பேரவையும்இ அதனோடு தொடர்பிலிருந்த ஏனைய சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும், கொழும்புடன் நெருங்கிச் செயற்பட்டிருந்தனர்.
இந்த பின்புலத்தில், உலகத் தமிழர் பேரவையின் வேண்டுகோளுக்கு அமைவாகவே, சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கப்பட்டன.
தடைகள் நீக்கப்பட வேண்டிய அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் விபரங்களும் உலகத் தமிழர் பேரவையினாலேயே ரணில்-மைத்திரி அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மங்கள சமரவீர இங்கிலாந்திற்கு சென்றிருந்த போதுஇ உலகத் தமிழர் பேரவை உட்பட ஏனைய சில புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உத்தியோகபூர்வமாக சந்தித்திருந்தார்.
2019இல், கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, எதிர்பார்த்தது போன்றே, ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் அமைப்புக்கள் மீளவும் தடைசெய்யப்பட்டன.
விடுதலைப் புலிகள் சார்பானவர்கள் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான், புலம்பெயர் அமைப்புக்கள் மீது, ராஜபக்ஷ அரசாங்கம் தடைவிதித்தது.
ஆனால் உண்மையில் தடைப்பட்டியலில், இருந்த அமைப்புக்கள் பலவும், 2009இற்கு பின்னர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கைவிட்டிருந்தன.
குறிப்பாக உலகத் தமிழர் பேரவைஇ கனடிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு நிலையில் இல்லை.
மேலும், தனிநாட்டுக் கோரிக்கையையும் கைவிட்டிருந்தன.
புலம்பெயர் அமைப்புக்களை நோக்கும் கொழும்பின் அணுமுறை தெளிவற்றது.
அதாவது, கொழும்பின் அணுகுமுறையானது, கொள்கை நிலைப் பாட்டிற்குட்பட்ட ஒன்றல்ல.
இதன் காரணமாகவே ஓர் அரசாங்கம் தடை விதிப்பதும், பின்னர் பிறிதொரு அரசாங்கம் தடையை நீக்குவதாகவும் விடயங்கள் கையாளப்பட்டன.
இப்போதும் நாடுகடந்த அரசாங்கத்தின் மீதான தடை நீக்கப்படவில்லை.
சகல புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும்.
மேற்குலகில் இயங்கிவரும் ஓர் அமைப்பை, பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி தடைசெய்வதானது, அடிப்படையிலேயே முரண்பாடான ஒன்றாகும்.
வெளிவிவகாரங்களை வெறுமனே, உள்ளூர் அரசியலின் அடிப்படையில் நோக்குவதன் விளைவாகவே இவ்வாறான தவறுகள் நிகழ்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அனைத்து புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகளையும் நீக்க வேண்டும்.
அவர்கள், வடக்கு, கிழக்கோடு ஊடாடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
புலம் பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் சிறிலங்கா அரசிற்கு எதிராக வன்முறையை பிரயோகிக்கக் கூடிய ஆற்றலோடு இல்லை.
மேலும் மேற்கு நாடுகளில் சிறந்த முறையில் வாழும் அவர்களால், ஒருபோதும் அவ்வாறான
முடிவை எடுக்கவும் முடியாது.