அமெரிக்காவின் முன்னாள் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மகன் தனது தாயின் துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
புளோரிடா மாநில பல்கலைகழகத்தில் இடம்பெற்ற இந்த வன்முறையில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
புளோரிடா பல்கலைகழகத்தின் மாணவனான பீனிக்ஸ் இக்னெர் மதியஉணவு வேளையின் போது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் சந்தேகநபர்மீது பதில்தாக்குதலை மேற்கொண்டனர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், என தெரிவித்துள்ள அமெரிக்க ஊடகங்கள் இந்த வன்முறைக்கான காரணங்கள் தெரியவில்லை உயிரிழந்தவர்கள் மாணவர்கள் இல்லை என தெரிவித்துள்ளன.
சந்தேகநபர் முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகன் அவர் ஒரு முன்மாதியான ஊழியர் எனவும் ஷெரீப் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனவரிமாதம் டிரம்ப் பதவியேற்பதற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சந்தேகநபர் பதவியேற்றிருந்தார் என மாணவர்களின் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இதேவேளை அவர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்த விடயங்களை அகற்றியுள்ள மாணவர் செய்தித்தாளின் இணையத்தளத்தின் ஆசிரியர்கள் சந்தேகநபரின் குரலிற்கு முக்கியத்துவம் வழங்கவிரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.