பெண்ணொருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் வெலிவேரிய, எம்பறலுவ தெற்கு பிரதேசத்தில் 58 வயதுடைய பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற இரண்டாவது சந்தேகநபரான இவர், நேற்று பெலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது, 05 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவிடியான பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என வெலிவேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.