பெண் அரசியல்வாதி இரத்தகாயங்களுடன் மருத்துவமனையில் ?

0
113

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரத்த காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், மம்தா பானர்ஜியின் நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் இரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதுஆனால் மேற்கு வங்க அரசு மற்றும் கட்சி தலைமை, கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை

இதுகுறித்து அவர்கள் பதிவிட்டிருக்கும் பதிவில், “எங்கள் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் காயம் ஏற்பட்டது. தயவுசெய்து அவரை உங்கள் பிரார்த்தனை மூலம் நல்லநிலையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளது.