கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில், கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையம், மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக, மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன், சுமார் 5 ஆயிரத்து 320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த மே மாதம் 25 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய கட்டட தொகுதியானது, போதிய ஆளணி வசதி இல்லை என தெரிவித்து மூடப்பட்டுள்ளதாக, மக்கள் கவலை வெளியிட்டனர்.

