சுமார் 24.5 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து 5 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.