பெரும்பான்மையை இழந்தது சர்மா ஓலி அரசு

0
277

நேபாளத்தில் பிரதமர் கே.பி. ஓலி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன்) அதிகாரப்பூர்ாவமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதுகுறித்து சிபிஎன் கட்சியின் மூத்த தலைவர் கணேஷ் ஷா கூறியதாவது:
நேபாளத்தில் சர்மா ஓலி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறும் கடிதத்தை நாடாளுமன்றச் செயலகத்தில் சிபிஎன் கட்சி அளித்தது.
கட்சியின் தலைமைக் கொறடா தேவ் குருங் அந்தக் கடித்தை நாடாளுமன்றச் செயலகத்தில் சமர்ப்பித்தார் என்றார் அவர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேவ் குங் கூறுகையில், சர்மா ஓலி தலைமையிலான அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் நாட்டின் இறையாண்மை, ஜனநாயக மாண்புக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதால், அந்த அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற முடிவு செய்தோம் என்றார்.
சிபிஎன் கட்சியின் ஆதரவு திரும்பப் பெறப்படப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மேலவையான பிரதிநிதிகள் சபையில் சர்மா ஓலியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.