தென் அமெரிக்க நாடான பெருவில் ஹூவான்கோ நகரிலிருந்து தலைநகரான லிமாவுக்குச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து அந்நாட்டுப் பொலிசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.