பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்கும்: ஜே.வி.பி!

0
204

ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வெகுவிரைவில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஐ.ஓ.சி.யை விட அதிகமாக எரிபொருள் விலையை அதிகரிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘மன்னார் – பேசாலையில் எரிபொருள் தயாரிக்கப்படும் என்றும் , அதன் மூலம் நாட்டுக்கு தேவையான எரிபொருளைப்
பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது. எனினும் அது வெறும் கனவாகவே உள்ளது.
முன்னர் பணம் செலுத்தி எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டது,எனினும் தற்போது கடன் அடிப்படையிலேயே எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அண்மையில் இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பலொன்று வருகை தந்துள்ளது.
அதனைப் பொறுப்பேற்பதற்காக அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தனவுடன் உதய கம்மன்பிலவும் துறைமுகத்திற்குச் சென்றுள்ளார்.
எந்தளவிற்கு புதுமைமிக்க நாடு இது? ஐ.ஓ.சி. எரிபொருள் விலையை அதிகரித்தமையால் , இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கே பாவனையாளர்கள் செல்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்படும் அளவு அதிகரிக்கும்.
இதனால் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.
எனவே ஐ.ஓ.சி.யை விட அதிகமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்’ என்று ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.