பெலிகஸ்வேல்ல துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஒருவர் கைது

0
41

ஊரகஸ்மன்ஹந்திய காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட பெலிகஸ்வேல்ல பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ஒருவர் மீது கடந்த 4 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மன்ஹந்திய காவல் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பெலிகஸ்வேல்ல பகுதியில் நேற்று மாலை (09) ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது இந்த குற்றச்செயலுக்கு உதவியதாகத் தெரிவித்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெலிகஸ்வேல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மன்ஹந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.