சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வந்ததன் பின்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாண் உள்ளிட்ட தமது உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளதுடன், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் அது தானாகவே பேக்கரி தொழிலை பாதிக்கும்.
மேற்கூறிய அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலைகள் உயரும், ஆனால் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை தீர்மானிக்கவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.