பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை – ரஷ்யா

0
125

யுக்ரேன் – ரஷ்யா இருநாட்டு பிரதிநிதிகளுடன் நேற்று துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து நேற்று ஊடகங்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்குப் பின், யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கையை குறைத்துக்கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. தாங்கள் “நடுநிலை” வகிப்பது குறித்து யோசிப்பதாக, யுக்ரேன் தெரிவித்திருந்தது.
“யுக்ரேன் தாம் முன்மொழிவதை எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு வடிவமைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறு எங்களால் (ரஷ்யா) செய்ய முடியவில்லை” என டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
“அதனால், தற்போதைக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, உறுதியான எதனையும் பேச்சுவார்த்தையில் எட்டவில்லை” என அவர் கூறியதாக, இண்டர்ஃபேக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.