லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழந்ததாகவும், பலர்; படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காஸா போர் ஆரம்பித்த பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினரை கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்த்து பேஜர் கருவிகளை பயன்படுத்தினர். பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஜர்கள் வெடித்துச்சிதறியதில் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளின் போது ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துள்ளன.
பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள டகியேவில் இறுதி நிகழ்வில் ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டிருந்தவேளை வெடிப்புசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
நபர் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடப்பதையும் மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதன் பின்னர் அந்த வீதிகளில் வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன,
இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பேஜர் கருவிகள் வெடித்ததில் 20 பேர் பலி பலர் காயம்!