பேருவளையில் வங்கி ஒன்றில் திருட்டு ; சந்தேகநபர் கைது

0
80

பேருவளை – காலி வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள வங்கி ஒன்றில் திருடிய சந்தேக நபர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது இன்று அதிகாலை 3.45 மணியளவில் சந்தேகநபர் ஒருவர் குறித்த வங்கியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து திருடியுள்ள நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.