கிழக்கு நேபாளத்தின் சங்குவாசபா மாவட்டத்தில் இன்று நடந்த வீதி விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சங்குவாசபாவில் இருந்து டமாக் நோக்கிச் சென்ற பேரூந்து மதி நகரில் காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறந்த 14 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிவேகமாக பேரூந்து சென்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பேரூந்தில் 19 முதல் 21 பேர் பயணம் செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் செயின்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.