பேலியகொடை, கொம்பனித்தெரு பகுதிகளில் வீடுகளை வழங்குவதாகக் கூறி பணமோசடி

0
68

பேலியகொடை மற்றும் கொம்பனித்தெரு பிரதேசங்களில்  குறைந்த வருமானம் பெறும் வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்குவதாகக் கூறி மக்களிடம் பண மோசடி செய்த சந்தேகத்தின் பேரில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், பல்வேறு நபர்களிடமிருந்து 19,663,800 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  சிலாபம்பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.