முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்தை சுற்றி வளைத்து 21 இளைஞர்களை கைது செய்ததாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கடுவெல, வெலிவிட்ட பகுதியில் வைத்து இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 சிகரெட்டுகள், பீல் என்ற போதை குளிசைகள் 07 மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பிற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 – 27 வயதுக்குட்பட்டவர்கள் என கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.