பொகவந்தலாவையில் எட்டுப் பேருக்கு குளவிக் கொட்டு!

0
91

நுவரெலியா, பொகவந்தலாவையில் குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டபகுதியில் 5ஏ தேயிலை மலையில் புற்களுக்கு மருந்து விசிறும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 08 ஆண் தொழிலாளர்கள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்த சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மரம் ஒன்றில் காணப்பட்ட குளவி கூட்டை பருந்து கலைத்ததால் இந்த அனர்;த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.