பொகவந்தலாவையில் விழிப்புணர்வு செயலமர்வு

0
125

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பகுதியில் போதை பொருள் பாவணை சிறுவர் துஸ்பிரயோகம், குடும்ப வன்முறை உள்ளிட்ட விடயங்களை தடுப்பது தொடர்பான செயலமர்வு இடம்பெற்றுள்ளது. குறித்த செயலமர்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவணையினை தடுப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் சமூகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இதனால் ஏற்படும் தீமைகள் குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து தெளிவு படுத்தப்பட்டன. மேலும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கு பெற்றோர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வெளிநாடு சென்று பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் சவால்கள் குடும்பங்களில் ஏற்படுகின்ற நெறிப்புரள்வுகள் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் இது குறித்தும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பிரிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு பிரிடோ நிறுவனத்தின் இணைப்பாளர்களான அமரச்செல்வம் மற்றும் கருணாகரன் பொகவந்தலா பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.