நுவரெலியா பொகவந்தலாவ வைத்தியசாலையில், 30 வருட காலம் சேவையாற்றிய மருத்துவர் எம்.பரமேஸ்வரன், இன்று, ஓய்வு பெற்றுள்ளார்.
பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் 30 வருடங்களும், வலப்பனை மற்றும் அக்கரபத்தனை ஆகிய வைத்தியசாலைகளில் 8 வருடங்களும் சேவையாற்றிய மருத்துவர் எம்.பரமேஸ்வரன், இன்று, பொகவந்தலாவ வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு, சமைத்த உணவு பொதிகளை வழங்கினார்.
இதன் போது, பொகவந்தலாவ சமுக செயற்பாட்டாளர்கள், மருத்துவருக்கு, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி வைத்தனர்.