பொசன் பூரணையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

0
11

பொசன் பூரணையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனத் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 தொடருந்து சேவைகளும் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 தொடருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.