பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பில், புதிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.