பொதுத் தேர்தல் செலவீனங்கள் – நாளை முக்கிய கலந்துரையாடல்

0
76

எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நாளை (15) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

அதன்படி, ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.